மைனூவை வாங்க அட்லாட்டிகோ மாட்ரிட், ரியல்மாட்ரிட் அணிகள் தயாராக உள்ளன
மைனூவை வாங்க அட்லாட்டிகோ மாட்ரிட், ரியல்மாட்ரிட் அணிகள் தயாராக உள்ளன
மாட்ரிட்:
கோபி மைனூவை வாங்க அட்லாட்டிகோ மாட்ரிட், ரியல்மாட்ரிட் அணிகள் தயாராக உள்ளன.
மென்செஸ்டர் யுனைடெட் அணியின் இளம் ஆட்டக்காரராக கோபி மைனூ விளங்குகிறார்.
இவரை தற்போது ஸ்பெயின் ஜாம்பவான்ளும் பல பிரிமியர் லீக் கிளப்புகளும் இணைந்து கண்காணித்து வருவதாக கூறப்படுகிறது.
புதிய நிர்வாகி ரூபன் அமோரிமின் கீழ் விளையாட நேரம் கிடைப்பதில் அவர் சிரமப்படுகிறார்.
இதன் அடிப்படையில் அட்லாட்டிகோ மாட்ரிட், ரியல் மாட்ரிட் ஆகிய அணிகள் இங்கிலாந்து அனைத்துலக வீரரின் முன்னேற்றத்தை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக கூறப்படுகிறது.
ஸ்பெயின் தலைநகரில் உள்ள கிளப்புகளுக்கு சீசன் முழுவதும் கடன் மாற்றம் ஒரு கவர்ச்சிகரமான விருப்பமாக இருக்கும் என்று வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்த பரிமாற்ற பேச்சுவார்த்தை அடுத்த திங்கட்கிழமையுடன் முடிவடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்

