கிறிஸ்டியானோ ரொனால்டோ புதிய சாதனை
கிறிஸ்டியானோ ரொனால்டோ புதிய சாதனை
ஹாங்காங்:
போர்த்துகல் கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ 4 கிளப் அணிகளுக்கு தலா 100 கோல் அடித்து சாதனை படைத்தார்.
ஹாங்காங்கில், சவூதி சூப்பர் கிண்ண கால்பந்து 12ஆவது சீசன் போட்டி அண்மையில் நடந்தது.
இதன் இறுதியாட்டத்தில் அல் நசர், அல் அஹ்லி அணிகள் மோதின. விறுவிறுப்பான இப்போட்டி ஆட்டநேர முடிவில் 2-2 என சமநிலையில் இருந்தது.
பின் பெனால்டியில் அசத்திய அல் அஹ்லி அணி 5-3 என வெற்றி பெற்று, 2ஆவது முறையாக (2016, 2025) கிண்ணத்தை வென்றது.
இப்போட்டியில் அல் நசர் அணியின் கிறிஸ்டியானோ ரொனால்டோ, ஒரு கோல் அடித்தார்.
இது அல் நசர் அணிக்காக ரொனால்டோ அடித்த 100ஆவது கோல் (113 போட்டி) ஆனது.
கால்பந்து அரங்கில், 4 கிளப் அணிகளுக்காக தலா 100 அல்லது அதற்கு மேல் கோல் அடித்த முதல் வீரர் என்ற சாதனை படைத்தார் ரொனால்டோ.
ஏற்கனவே இவர் ரியல் மாட்ரிட் (450 கோல், 438 போட்டி), மென்செஸ்டர் யுனைடெட் (145 கோல், 346 போட்டி), ஜுவாந்தஸ் (101 கோல், 134 போட்டி) அணிகளுக்காக 100+ கோல் அடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்

