images

இங்கிலாந்து பிரிமியர் லீக்: லிவர்பூல் வெற்றி

image

இங்கிலாந்து பிரிமியர் லீக்: லிவர்பூல் வெற்றி

லண்டன்:

இங்கிலாந்து பிரிமியர் லீக் கால்பந்து போட்டியில் லிவர்பூல் அணியினர் வெற்றி பெற்றனர்.

எஸ்டி ஜேம்ஸ் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் லிவர்பூல் அணியினர் நியூகாஸ்டல் அணியை சந்தித்து விளையாடினர்.

இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய லிவர்பூல் அணியினர் 3-2 என்ற கோல் கணக்கில் நியூகாஸ்டல் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

லிவர்பூல் அணியின் வெற்றி கோல்களை ராயோ கிராவன்பிரிட்ஜ், ஹூகோ எக்திக், ரியோ எங்மோஹா ஆகியோர் அடித்தனர்.

லா லீகா கால்பந்து போட்டியில் கெதாஃபி அணியினர் 2-1 என்ற கோல் கணக்கில் செவிலா அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

அட்லாட்டிகோ பில்பாவ் அணியினர் 1-0 என்ற கோல் கணக்கில் ராயோ வலாகனோ அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

பகிர்
+ - reset