இந்தியா - சீனா இடையே மீண்டும் விமான சேவை
புது டெல்லி:
இந்தியா - சீனா இடையே மீண்டும் விமான சேவையைத் தொடங்க இருநாடுகளும் ஒப்புதல் தெரிவித்துள்ளன.
இருநாள் சுற்றுப்பயணமாக இந்தியா வந்துள்ள சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி உடன் பிரதமர் மோடி சந்தித்த போது இந்த முடிவு எடுக்கப்பட்டது.
மேலும், இரு நாடுகளும் வர்த்தகத்தை தொடங்கவும் முடவு செய்துள்ளன. இரு நாடுகளின் அமைதி உலக வளர்ச்சிக்கு உதவும் என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.
பின்னர் வாங் யி வெளியிட்ட பதிவில் இந்தியா -சீனா இடையேயான உறவுகள் தற்போது நேர்மறையாக உள்ளன.
இதனால் இருதரப்பு உறவில் நல்ல முன்னேற்றம் ஏற்படும் எனறார்.
இரு நாடுகளும் ஒருவரையொருவர் நண்பர்களாகவும் கூட்டாளிகளாகவும் எண்ண வேண்டுமே தவிர எதிரியாகவும் அச்சுறுத்தலாகவும் பார்க்கக் கூடாது.
என்றார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்

