செய்ட் ஃபுட் இண்டஸ்ட்ரீஸ் 1.5 மில்லியன் பிரியாணி விற்று சாதனை: மலேசியா புக் ஆப் ரெகார்ட்ஸ் புத்தகத்தில் பதிவு
பெட்டாலிங் ஜெயா:
செய்ட் ஃபுட் இண்டஸ்ட்ரீஸ் மற்றுமொரு சாதனை சரித்திரத்தை படைத்துள்ளது என்று அக் குழுமத்தின் தலைவர் டத்தோ ஹாஜி ஜமருல் கான் தெரிவித்தார். ஒரு வருட காலத்தில் 1.5 மில்லியன் பிரியாணி விற்பனை செய்து மலேசியா புக் ஆப் ரெகார்ட்ஸ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது என்றார் அவர்.
இதற்கு முன்பு இடம்பெற்றிருந்த 5 லட்சம் பிரியாணி விற்பனை எனும் சாதனையை செய்ட் ஃபுட் இண்டஸ்ட்ரீஸ் முறியடித்துள்ளது என்று அதன் நிர்வாக இயக்குனர் அஜீஸ் கான் கூறினார். இந்த விற்பனை எங்களது ஏர் ஆசியா விமான சேவைக்கு மட்டுமே. அதுவல்லாமல் எங்கள் குழுமம் செய்துவரும் பிஸ்ட்ரோ உணவக விற்பனை, கேட்டரிங் எல்லாம் இவற்றில் நாங்கள் சேர்க்கவில்லை. அவற்றையெல்லாம் சேர்த்தால் அதன் எண்ணிக்கை பல மடங்கு உயரும் என்று அஜீஸ் கான் கூறினார்.

2009 இல் இருந்து நாங்கள் விமானங்களுக்கு உணவு சேவை வழங்கி வருகின்றோம். இதுவரை கணக்கு எடுத்து பார்த்தால் ஏறக்குறைய 40 மில்லியன் அளவுக்கு நாங்கள் உணவு வழங்கி இருக்கிறோம் என்று டத்தோ ஜமருல் கான் கூறினார்.
இன்று செய்ட் ஃபுட் இண்டஸ்ட்ரீஸ்ஸுக்கு வருகை தந்த மலேசியா புக் ஆப் ரெகார்ட்ஸ் அதிகாரிகள் சாதனைக்குரிய சான்றிதழை குழுமத்தின் தலைவர் டத்தோ ஜமருல் கான். நிர்வாக இயக்குனர் அஜீஸ் கான் முன்னிலையில் வழங்கினார்.
இன்றைய நிகழ்ச்சிக்கு மலேசிய இந்திய முஸ்லிம் வர்த்தக சபை தலைவர் டத்தோ பி வி அப்துல் ஹமீத், பெரஸ்மா துணைத் தலைவர் டத்தோ முஹம்மது மொஹ்சின், டத்தோஸ்ரீ அக்மல் உட்பட முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.
- ஃபிதா

