images

ரஜினி நடித்துள்ள ‘கூலி’ திரைப்படம்: உற்சாகத்தில் ரசிகர்கள் 

image

ரஜினி நடித்துள்ள ‘கூலி’ திரைப்படம்: உற்சாகத்தில் ரசிகர்கள் 

சென்னை:

ரஜினி நடித்துள்ள ‘கூலி’ திரைப்படம் வெளியாகி ரசிகர்களை உற்சாகமடையச் செய்துள்ளது. இதனிடையே ‘கூலி’ படக்குழுவை அழைத்து வாழ்த்து தெரிவித்துள்ளார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள ‘கூலி’ திரைப்படம் பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே இன்று (ஆக.14) வெளியானது. தமிழகத்தில் முதல் காட்சி காலை 9 மணிக்கும், இதர மாநிலங்களில் காலை 6 மணிக்கும் திரையானது. அனைத்து மாநிலங்களிலும் டிக்கெட் முன்பதிவில் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளது ‘கூலி’.

வெளிமாநிலங்களில் காலை 6 மணிக்கே படம் ரிலீஸ் ஆனதால் தீவிர ரஜினி ரசிகர்கள் இன்று முதல் ஷோ பார்க்க ஆந்திரா, கேரளா உள்ளிட்ட வெளிமாநிலங்களிலும் குவிந்தனர். ‘கூலி’ முதல் காட்சியைப் பார்த்த நெட்டிசன்களிடமிருந்து கலவையான விமர்சனங்களே வருகிறது.

இதற்கிடையில், ‘கூலி’ படக்குழுவை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் வரவழைத்து சந்தித்து வாழ்த்து கூறியுள்ளார். அது தொடர்பான புகைப்பத்தை தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்த லோகேஷ் கனகராஜ், “தங்களின் அன்புக்கும், வாழ்த்துக்கு நன்றி” எனக் குறிப்பிட்டுள்ளார்.

மாலிக் ஸ்ட்ரீம்ஸ் நிறுவனம் மலேசியாவில் இந்தப் படத்தை வெளியிட்டுள்ளது. நாடு முழுவதும் ரஜினி ரசிகர்கள் இந்த படத்தை கொண்டாடி வருகின்றார்கள். 

- ஆர்யன் 

பகிர்
+ - reset