images

நடிகர் விஜய் தேவரகொண்டாவிடம் அமலாக்கத் துறை விசாரணை

image

நடிகர் விஜய் தேவரகொண்டாவிடம் அமலாக்கத் துறை விசாரணை

ஹைதராபாத்: 

சூதாட்ட செயலிகளின் விளம்பரங்களில் நடித்து பண முறைகேடு செய்ததாக வழக்கில் நடிகர் பிரகாஷ் ராஜை தொடர்ந்து விஜய் தேவரகொண்டாவிடம் அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

விஜய் தேவரகொண்டா விசாரணைக்கு ஆஜரானார். அவரிடம், விளம்பரத்தில் நடித்ததற்காக பெறப்பட்ட ஊதியம் எவ்வளவு? யார் கொடுத்தார்கள்? என கேள்வி கேட்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆகஸ்ட் 11-ஆம் தேதி நடிகர் ராணாவும், 13-ஆம் தேதி  நடிகை மஞ்சு லட்சுமியும் விசாரணைக்கு ஆஜரானார்கள்.

- ஆர்யன்

பகிர்
+ - reset