இந்திய திரையுலகின் பிரபல பழம்பெரும் நடிகை சரோஜா தேவி காலமானார்
பெங்களூரு:
இந்திய திரையுலக வரலாற்றில் மிகச்சிறந்த நடிப்பால் நம்மை ஈர்த்த பழம்பெரும் நடிகையும் கன்னடத்து பைங்கிளியுமான நடிகை சரோஜா தேவி வயது மூப்பு காரணமாக காலமானார்.
அவருக்கு வயது 87ஆகும். அபிநய சரஸ்வதி, கன்னடத்து பைங்கிளி என ரசிகர்களால் அழைக்கப்பட்டவர் நடிகை சரோஜா தேவி
எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், உள்ளிட்ட திரையுலக ஜாம்பவான்களுடன் பல்வேறு படங்களில் நடித்த பெருமையும் இவரையே சாரும்.
இந்நிலையில் இன்று பெங்களூரு மல்லேஸ்வரம் பகுதியில் உள்ள தனது இல்லத்தில் நடிகை சரோஜா தேவி காலமானார்.
17 வயது முதலே இந்திய சினிமாவில் கால் பதித்த அவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் நடித்த நடிகையாகவும் திகழ்ந்தார்.
நடிகை சரோஜா தேவி காலமானதைத் தொடர்ந்து திரைத்துறையினர் அதிர்ச்சி அடைந்த நிலையில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்

