மினிமம் பேலன்ஸ் இல்லையென்றால் அபராதம் இல்லை: இரு வங்கிகள் அறிவிப்பு
புது டெல்லி:
சேமிப்புக் கணக்குகளில் மினிமம் பேலன்ஸ் இல்லை என்றால் அபராதம் வசூலிக்கப்படாது என இந்தியன் வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி அறிவித்துள்ளன.
பஞ்சாப் நேஷனல் வங்கியில் இந்த நடைமுறை ஜூலை 1ஆம் தேதி அமலாகியது. இந்தியன் வங்கியில் ஜூலை 7ம் தேதி அமலாகிறது.
குறைந்தபட்ச இருப்புத்தொகை கிராமப்புறங்களில் குறைவாகவும், பெருநகரங்களில் அதிகமாகவும் உள்ளது.
இது ஏழை, எளிய மக்களை வெகுவாக பாதித்து வந்தது. இவ்வாறு அபராதத் தொகை வசூலித்தே அதில் இருக்கும் பணம் அனைத்தும் காலியாகும் நிலையும் உருவானது.
இதற்கு பொது மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.
- ஆர்யன்

