images

மீண்டும் 9000 ஊழியர்களை மைக்ரோசாப்ட் நிறுவனம் பணியிலிருந்து நீக்கியது

image

மீண்டும் 9000 ஊழியர்களை மைக்ரோசாப்ட் நிறுவனம் பணியிலிருந்து நீக்கியது

கலிஃப்போர்னியா:

மைக்ரோசாப்ட் நிறுவனம் மீண்டும் ஆட்குறைப்பு நடவடிக்கையை மேற்கொண்டது.

இம்முறை சுமார் 9000 ஊழியர்களை அந்நிறுவனம் பணியிலிருந்து நீக்குவதாக அறிவித்தது.

செயற்கை நுண்ணறிவுதொழில்நுட்பத்தில் முதலீட்டைப் பெருக்கி செலவைக் குறைக்க மைக்ரோசாப்ட் நிறுவனம் இந்நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது.

நிர்வாகிகளின் எண்ணிக்கையைக் குறைத்துக் கட்டமைப்பில் மாற்றம் செய்யவிருப்பதாய் நிறுவனம் தெரிவித்தது.

கடந்தாண்டு ஜூன் நிலவரப்படி அந்நிறுவனத்தில் சுமார் 228,000 பேர் வேலை செய்தனர். 

கடந்த மே மாதம் 6,000 பேரை வேலையிலிருந்து நீக்குவதாகச் நிறுவனம் கூறியது.

மைக்ரோசாப்ட் அதன் விற்பனைப் பிரிவில் ஆட்குறைப்பு செய்யத் திட்டமிடுவதாய் புளும்பர்க் செய்தி நிறுவனம் சென்ற மாதம் கூறியிருந்தது.

- அஸ்வினி செந்தாமரை

பகிர்
+ - reset