images

ஆமிர் கானின் தங்கல் படத் தடைக்கு தற்போது வருந்தும் பாகிஸ்தான்

image

ஆமிர் கானின் தங்கல் படத் தடைக்கு தற்போது வருந்தும் பாகிஸ்தான்

கராச்சி:

 2017இல் ஆமிர் கான் நடித்த தங்கல் திரைப்படத்துக்கு பாகிஸ்தானில் தடைவிதித்ததற்கு பஞ்சாப் மாகாண அமைச்சர் மரியம் ஒளரங்கசீப் தற்போது வருத்தம் தெரிவித்தார்.

அப்போது பாகிஸ்தான் தகவல் தொடர்புத் துறை அமைச்சராக மரியம் பதவி வகித்து வந்தார். திரைப்படத் தணிக்கைக் குழு பிரதிநிதிகள் கூட்டத்தில் முதல்முறையாகப் பங்கேற்று குழு அளித்த பரிந்துரையை ஏற்று அத் திரைபடத்தைப் பற்றி எதுவும் தெரிந்து கொள்ளாமல் தடை விதித்ததாகவும் மரியம் கூறியுள்ளார்.

பின்னர் ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு அத் திரைப்படத்தைப் பார்த்தேன்.

அப்போதுதான் அப்படத்தை தடை செய்ய முடிவெடுத்தது தவறு என்பதை உணர்ந்தேன். அந்தத் திரைப்படம் வெளியாகியிருந்தால் பாகிஸ்தான் பெண்களும் அதனைப் பார்த்து உத்வேகம் பெற்றிருப்பார்கள் என்றார் அவர்.

- ஆர்யன்

பகிர்
+ - reset