சர்வதேச விண்வெளி நிலையத்தை கால் பதித்த முதல் இந்தியர்
சர்வதேச விண்வெளி நிலையத்தை கால் பதித்த முதல் இந்தியர்
புது டெல்லி:
டிராகன் விண்கலம்த்தின் மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்தை முதல் முறையாக இந்தியாவின் சுபான்ஷு சுக்லா கால்பதித்தார்.
விண்வெளிக்குச் சென்ற 634 வது விண்வெளி வீரராவர். விண்வெளி நிலையத்தில் அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் பேசிய சுபான்ஷு சுக்லா, அடுத்த 14 நாள்களில், நானும், சக விண்வெளி வீரர்களும் அறிவியல் பரிசோதனைகளை மேற்கொண்டு பூமியில் உள்ள மக்களுடன் தொடர்பு கொள்வோம். இது இந்தியாவின் விண்வெளி பயணத்தின் ஒரு முக்கியக் கட்டம்.
இந்தப் பயணத்தை உற்சாகமாக்குவோம். மூவர்ணக் கொடியுடன், இந்தியர்கள் அனைவரையும் என்னுடன் சுமந்து வந்துள்ளேன் என்றார்.
- ஆர்யன்

