சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையத்தை இன்று சென்றடைகிறது டிராகன் விண்கலம்
சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையத்தை இன்று சென்றடைகிறது டிராகன் விண்கலம்
புது டெல்லி:
சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையத்தை டிராகன் விண்கலம் இன்று சென்றடைகிறது.
பூமியிலிருந்து சுமார் 400 கி.மீ உயரத்தில் சர்வதேச விண்வெளி நிலையம் சுற்றிக் கொண்டிருக்கிறது.
இந்த நிலையத்துக்கு இந்தியாவின் ராகேஷ் சுக்லா உள்பட 4 பேர் அமெரிக்காவின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் பல்கான் ராக்கெட் மூலம் புதன்கிழமை சென்றனர்.
6 முறை ஒத்திவைப்புக்கு பிறகு இந்த விண்வெளி பயணம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டது.
அவர்கள் சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைய 28 மணிநேரமாகும்.
பல்கான் ராக்கெட்டில் இருந்து பிரியும் டிராகன் விண்கலம் முதலில் பூமியின் ஈர்ப்பு விசையிலிருந்து விடுபட்டு, விண்வெளிக்குள் புவி சுற்றுவட்டப் பாதையில் நுழையும்.
பூமியின் வளிமண்டலத்தைக் கடந்தபின், சர்வதேச விண்வெளி நிலையத்தின் அதே சுற்றுவட்டப் பாதையில் இணையும்.
- ஆர்யன்

