images

நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள கூலி படத்தின் முதல் பாடல் வெளியானது

image

நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள கூலி படத்தின் முதல் பாடல் வெளியானது

சென்னை: 

நடிகர் ரஜினிகாந்தின் 171ஆவது படமாக கூலி படம் உருவாகியுள்ளது. 

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அனிருத் இசையமைப்பில் கூலி படம் இவ்வாண்டு ஆகஸ்ட் 14ஆம் தேதி திரைக்கு வருகிறது. 

நடிகர் ரஜினிகாந்துடன் நடிகர்கள் நாகர்ஜூனா, உபேந்திரா, சத்யராஜ், ஸ்ருதி ஹாசன், அமீர் கான் ஆகியோர் நடித்துள்ளனர். 

தற்போது கூலி படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது. CHIKITHU எனும் பாடலை பாடகரும் நடிகரும் இயக்குநருமான டி.இராஜேந்தர், அனிருத் இருவரும் பாடியுள்ளனர். 

முன்னதாக, CHIKITHU பாடலில் சான்டி மாஸ்டர், அனிருத், டி.இராஜேந்தர் நடனமாடிய காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது. 

கூலி படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

-மவித்திரன் 

பகிர்
+ - reset