80க்கும் மேற்பட்ட மாணவக் கலைஞர்களின் படைப்புகளுடன் பத்துமலையில் பிரமாண்ட இசை கதம்பம்
பத்துமலை:
80க்கும் மேற்பட்ட மாணவக் கலைஞர்களின் படைப்புகளுடன் பத்துமலை திருத்தலத்தில் பிரமாண்ட இசைக் கதம்பம் விழா நடைபெறவுள்ளது.
இசைவர்த்தினி 2.0 எனும் இவ்விழா வரும் ஜூன் 28ஆம் தேதி சனிக்கிழமை காலை 9 மணி முதல் பத்துமலை திருத்தலத்தில் நடைபெறும்.
ஶ்ரீ ஐஸ்வர்யா பைன் ஆர்ட்ஸ் ஏற்பாட்டிலான இவ்விழாவிற்கு கோலாலம்பூர் மகா மாரியம்மன் தேவஸ்தானம் முழு ஆதரவை வழங்கியுள்ளது.
மேலும் டிஎஸ்கே குழுமம், மஹிமா இணைந்து இவ்விழாவை நடத்துகிறது.
கிட்டத்தட்ட 80க்கும் மேற்பட்ட மாணவ கலைஞர்கள் தங்களின் படைப்புகளை வழங்கவுள்ளனர்.
இந்திய இசைக் குழுவின் நேரடி படைப்புகளும் இவ்விழாவில் இடம் பெறவுள்ளது.
குறிப்பாக முருகப் பெருமானுக்கு முன்னிலையில் தெய்வீக இசை சமர்ப்பணமாக அமையவுள்ளது.
கோலாலம்பூர் ஶ்ரீ மகா மாரியம்மன் தேவஸதான தலைவர் டான்ஶ்ரீ நடராஜா, மஹிமா தலைவர் டத்தோ சிவக்குமார் ஆகியோர் இவ்விழாவிற்கு தலைமையேற்கவுள்ளனர்.
ஆகவே மக்கள் திரளாக வந்து இம்மாபெரும் இசை விழாவிற்கு ஆதரவு வழங்க வேண்டும் என ஏற்பாட்டுக் குழுவினர் கேட்டு கொண்டனர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்

