தக் லைஃப் படம் ஏமாற்றம்: மன்னிப்பு கேட்டார் இயக்குநர் மணிரத்னம்
சென்னை:
ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் வெளியாகி படுதோல்வி அடைந்த படம் தான் தக் லைஃப்
இந்த படத்தை இயக்கிய மணிரத்னம், தற்போது தக் லைஃப் படம் சரியாக போகாததால் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டுள்ளார்.
நாயகன் படத்தைப் போன்று ஒரு படத்தை எதிர்பார்த்த வேளையில் எங்களால் சரியாக வழங்க முடியவில்லை என்று மணிரத்னம் தெரிவித்தார்.
ரசிகர்களின் எதிர்பார்ப்பினைப் பூர்த்தி செய்ய முடியாததால் மணிரத்னம் மன்னிப்பு கேட்டுக்கொண்டார்.
நாயகன் படத்திற்குப் பிறகு மணிரத்னம் - கமல்ஹாசன் கூட்டணி மீண்டும் இணைந்தது. இந்த படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்த நிலையில் தற்போது படம் பெரும் தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது.
தக் லைஃப் படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். இந்த படம் கடந்த ஜூன் 5ஆம் தேதி வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்

