images

போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் திரைப்பட நடிகர் ஸ்ரீகாந்த் கைது 

image

போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் திரைப்பட நடிகர் ஸ்ரீகாந்த் கைது 

சென்னை:

போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் திரைப்பட நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ளார். 

பிரபல திரைப்பட நடிகர் ஸ்ரீகாந்த் போதைப்பொருள் பயன்படுத்தியதாக இன்று காலை சென்னை நுங்கம்பாக்கம் காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டு அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். 

மேலும் அவரது ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டதில் அவர் போதைப்பொருள் பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

அதிமுக முன்னாள் பிரமுகர் பிரசாத் என்பவரிடம் நடிகர் ஸ்ரீகாந்த் ஒரு கிராம் ரூ. 12,000 -க்கு வாங்கி 40 முறை போதைப்பொருள் பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இதற்காக ரூ. 72,000 ஆன்லைன் பணப்பரிவர்த்தனை செய்துள்ள ஆதாரங்கள் உள்ளன.

இந்நிலையில். நடிகர் ஸ்ரீகாந்த் போதைப்பொருள் பயன்படுத்தியது உறுதியான நிலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

ஆர்யன்

பகிர்
+ - reset