நடிகர் ஆர்யாவுக்குச் சொந்தமான உணவகங்களில் வருமான வரித்துறை சோதனை
சென்னை:
சென்னை அண்ணா நகரில் உள்ள நடிகர் ஆர்யாவுக்குச் சொந்தமான சீ ஷெல் உணவகங்களில் வருமான வரித்துறை அதிகார்கள் சோதனை நடத்தி வருகின்றனர்.
கீழ்ப்பாக்கம், கொட்டிவாக்கம், வேளச்சேரி உள்ளிட்ட இடங்களில் உள்ள ஆர்யாவின் உணவகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
அதைபோல சென்னையில் உள்ள நடிகர் ஆர்யா வீட்டிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்
வரி ஏய்ப்பு புகாரின் பேரில் சோதனை நடைபெறுவதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்

