நடிகர் தனுஷ் நடித்துள்ள குபேரா படத்தின் வெளியீட்டு உரிமையை வாங்கினார் பிரபல மலையாள நடிகர் துல்கர் சல்மான்
திருவனந்தபுரம்:
நடிகர் தனுஷ், நாகர்ஜூனா, ராஷ்மிகா மந்தனா நடித்துள்ள குபேரா படம் எதிர்வரும் ஜூன் 20ஆம் தேதி உலகம் முழுவதும் திரைக்கு வருகிறது.
குபேரா படத்திற்கு தேவி ஶ்ரீ பிரசாத் இசையமைத்துள்ள நிலையில் தமிழ், கன்னடம், மலையாள, ஹிந்தி, தெலுங்கு என பான் இந்தியா மொழிகளில் படம் வெளியாகிறது.
இந்த நிலையில், பிரபல மலையாள நடிகரான துல்கர் சல்மான் குபேரா படத்தின் கேரளா வெளியீட்டு உரிமையை வாங்கியுள்ளார்.
துல்கர் சல்மானின் தயாரிப்பு நிறுவனமான வே பாரர் பிலிம்ஸ் இந்த படத்தினை வாங்கி கேரளா மாநிலத்தில் வெளியீடு செய்கிறது.
சமீபத்தில் குபேரா படத்தின் டிரெய்லர் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பினைப் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்

