Googleஇல் தேடல் முடிவுகளை இனி உரையாடலாகக் கேட்கலாம்: புதிய தொழில்நுட்பம்
Googleஇல் தேடல் முடிவுகளை இனி உரையாடலாகக் கேட்கலாம்: புதிய தொழில்நுட்பம்
கலிபோர்னியா:
Google இணையத் தேடல்களின் முடிவுகளை இனி உரையாடல் வழி பெறும் தெரிவு அறிமுகமாகியுள்ளது.
செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் (AI) தேடல் முடிவுகளை உரையாடல் பாணியில் சுருக்கித் தருவதை Gemini AI தொழில்நுட்பத்தின் 'Audio Overviews' தெரிவு வழங்குவதாக Google தெரிவித்தது.
தேடல் முடிவுகளை எளிதில் பெற அந்தத் தெரிவு வழங்கப்படுவதாக Google சொன்னது.
தேடல் முடிவுகள் ஒலிபரப்பப்படும்போது அதைக் கேட்டுக்கொண்டே மற்ற வேலைகளைச் செய்யலாம் என்றும் அது சொன்னது.
தேடலுடன் தொடர்புடைய இணையத்தளங்களும் முடிவுகளில் சேர்க்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
சுமார் ஓராண்டுகாலமாக AI Overviews தெரிவை Google அதன் தேடல் முறையில் அறிமுகம் செய்துள்ளது.
அதிலிருந்து பயனீட்டாளர்களின் எண்ணிக்கை 1.5 பில்லியனுக்கும் அதிகமாக வளர்ந்துள்ளதாக நிறுவனம் தெரிவித்தது.
ஆதாரம் : AFP

