தளபதி விஜய்யின் ஜன நாயகன் படத்தின் கிளிம்ப்ஸ் ஜூன் 22ஆம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்ப்பு
சென்னை:
தமிழ்ச்சினிமாவின் தனது உச்சத்தில் இருக்கும் நடிகர் தளபதி விஜய்யின் 69ஆவது படமான ஜனநாயகன் படம் குறித்த அப்டேட் எதிர்வரும் ஜூன் 22ஆம் தேதி விஜய்யின் பிறந்தநாளன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜன நாயகன் படத்தின் டீசர் அல்லது கிளிம்ஸ் ஜூன் 22ஆம் வெளியாகலாம் என்றும் இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பெங்களூரு நகரை புகலிடமாக கொண்ட KVN PRODUCTIINS நிறுவனம் நடிகர் விஜய்யின் இறுதி படமான ஜன நாயகன் படத்தை தயாரிக்கிறது.
பூஜா ஹெக்டே, பிரகாஷ்ராஜ், பிரியாமணி, மமிதா பாஜு ஆகியோர் ஜன நாயகன் படத்தில் நடித்து வருகின்றனர்.
இந்நிலையில் மலேசியாவைச் சேர்ந்த உள்ளூர் கலைஞர் இர்ஃபான் ஜைனி ஜனநாயகன் படத்தில் நடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்

