images

மகாராஷ்டிராவில் மதுபான விலை 85 சதவீதம் வரை அதிரடியாக உயர்த்தியது மாநில அரசு 

image

மகாராஷ்டிராவில் மதுபான விலை 85 சதவீதம் வரை அதிரடியாக உயர்த்தியது மாநில அரசு 

மும்பை:

மகாராஷ்டிராவில் மதுபான விலையை மாநில அரசு அதிரடியாக அதிகரித்துள்ளது. இது தொடர்பான திட்டத்திற்கு அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

இதன் படி மதுபானங்கள் மீதான கலால் வரியை மாநில அமைச்சரவை 78 முதல் 85 சதவீதம் வரை அதிகரித்து இருக்கிறது. இதன் படி உள்நாட்டில் தயாரிக்கப்படும் வெளிநாட்டு மதுபானங்களில் விலை 90 முதல் 100 ரூபாய் வரை அதிகரித்துள்ளது. அதாவது ஒரு குவாட்டர் விலை 205 முதல் 215 வரை இனி விற்கப்படும்.

பிரிமியம் வெளிநாட்டு மதுபான வகைகள் விலை 9-12 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இது தவிர நாட்டுச்சாராயத்திற்கான கலால் வரியும் 14 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. 

இதனால் குவாட்டர் விலை ரூ.10-15 வரை அதிகரிக்கும். மேலும் பெர்மிட் ரூம், மதுபானக்கடைகளின் வருடாந்திர லைசென்ஸ் கட்டணம் 10-15 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது.

ஆர்யன்

பகிர்
+ - reset