images

சர்வதேச நாடுகளிடையே வர்த்தகப் பூசல் அதிகரித்ததால் மின்னிலக்க நாணயத்தில் முதலீடு செய்வது அதிகரிப்பு 

image

சர்வதேச நாடுகளிடையே வர்த்தகப் பூசல் அதிகரித்ததால் மின்னிலக்க நாணயத்தில் முதலீடு செய்வது அதிகரிப்பு 

நியூயார்க்:

Crypto Funds எனப்படும் மின்னிலக்க நாணய முதலீட்டு நிதியின் சொத்து மதிப்பு சென்ற மாதம் சாதனை அளவை எட்டியதாகத் தெரிவிக்கப்பட்டது.

நாடுகளிடையே வர்த்தகப் பூசல் அதிகரித்ததால் மின்னிலக்க நாணயத்தில் முதலீடு செய்யும் போக்கு அதிகரித்தது.

அமெரிக்காவின் நிச்சயமற்ற பங்குச்சந்தைச் சூழலும் அதற்கு ஒரு காரணம்.

294 மின்னிலக்க நாணய நிதிகள் பற்றிய தரவுகளை Morningstar நிறுவனம் வெளியிட்டது.

அவை சென்ற மாதம் 7 பில்லியன் டாலருக்கும் (சுமார் 8.9 பில்லியன் வெள்ளி) மேற்பட்ட முதலீட்டை ஈர்த்தன.

அவற்றின் மொத்த சொத்து மதிப்பு 167 பில்லியன் டாலராக (214 பில்லியன் வெள்ளி) இருந்தது.

ஆதாரம்: Reuters

பகிர்
+ - reset