images

மலேசியாவில் விஜய்யின் ஜனநாயகன் திரைப்பட விற்பனை: புதிய சாதனை

image

மலேசியாவில் விஜய்யின் ஜனநாயகன் திரைப்பட விற்பனை: புதிய சாதனை

சென்னை:

மலேசியாவில் கோடிக் கணக்கான தொகைக்கு ஜனநாயகம் திரைப்படம் விற்பனை ஆகியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

இயக்குநர் ஹெச். வினோத் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் ஜனநாயகன்.

இது விஜய்யின் கடைசி படமாகும். அரசியலில் முழுமையாக கவனம் செலுத்தவேண்டும் என்பதற்காக தனது சினிமாவிலிருந்து விலக முடிவு செய்துள்ளார்.

இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, பிரியாமணி, கவுதம் மேனன், பாபி தியோல், நரேன் என பலரும் நடித்துள்ளனர்.

மேலும் ஸ்ருதி ஹாசன் இப்படத்தில் சிறப்பு பாத்திரத்தில் வருவதாகவும் சொல்லப்படுகிறது. அடுத்த ஆண்டு பொங்கலுக்கு ஜனநாயகன் வெளிவரும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட்டனர்.

ரிலீஸுக்கு முன் ப்ரீ பிசினஸில் ஜனநாயகன் திரைப்படம் பட்டையை கிளப்பி வருகிறது. ஓடிடி, சாட்டிலைட் உரிமைகள் மாபெரும் தொகைக்கு விற்பனை ஆகியுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், ஜனநாயகம் திரைப்படத்தின் மலேசியா திரையரங்க உரிமை ரூ. 12 கோடிக்கு விற்பனை ஆகியுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

இது தமிழ் சினிமாவில் மிகப் பெரிய என கூறப்படுகிறது. இதன் மூலம் புதிய சாதனையை விஜய் படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பார்த்திபன் நாகராஜன்

பகிர்
+ - reset