images

கர்நாடகாவில் தக் லைஃப் படம் ஓடாது என்றால் விஜய்யின் ஜனநாயகன் படம் தமிழ்நாட்டில் ஓடாது 

image

கர்நாடகாவில் தக் லைஃப் படம் ஓடாது என்றால் விஜய்யின் ஜனநாயகன் படம் தமிழ்நாட்டில் ஓடாது 

சென்னை: 

தமிழ்மொழியிலிருந்து பிறந்ததுதான் கன்னட மொழி என்று நடிகர் கமல்ஹாசன் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து ஒன்றை தக் லைஃப் படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சியில் தெரிவித்தது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. 

இந்நிலையில் நடிகர் கமல்ஹாசனுக்கு ஆதரவாக பலர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். 

தக் லைஃப் படத்தை கர்நாடகாவில் திரையிடவில்லை என்றால் நடிகர் விஜய் நடித்துள்ள ஜனநாயகன் படத்தை தமிழ்நாட்டில் திரையிட மாட்டோம் என்று பலரும் கருத்து கூறி வருகின்றனர். 

ஜனநாயகன் படத்தை பெங்களூரு பகுதியைச் சேர்ந்த KVN PRODUCTIONS நிறுவனம் தயாரித்துள்ளதால் அதற்கு தடை விதிப்போம் என்று எக்ஸ் சமூக பக்கத்தில் பலரும் கருத்து பதிவிட்டு வருகின்றனர். 

நடிகர் விஜய்யின் 69ஆவது படமான ஜனநாயகன் படம் அடுத்தாண்டு பொங்கல் பண்டிகைக்கு வெளியாகவுள்ளது

-மவித்திரன் 

பகிர்
+ - reset