கர்நாடகாவில் இயக்குநர் மணிரத்னம் இயக்கிய தக் லைஃப் படம் வெளியீடு ஒத்திவைப்பு
பெங்களூரு:
இயக்குநர் மணிரத்னம் இயக்கி கமல்ஹாசன் நடித்துள்ள தக் லைஃப் படம் ஜூன் 5ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது.
இந்நிலையில் கர்நாடகா மாநிலத்தில் தக் லைஃப் படம் வெளியீடு ஒத்திவைக்கப்படுவதாக அம்மாநில உயர்நீதிமன்றத்தில் ராஜ் கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் வாதம் செய்தது.
மேலும், ஒரு வார கால அவகாசம் வேண்டும் என ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தது.
விண்வெளி நாயகன் கமல்ஹாசன் கர்நாடகா மொழி தொடர்பான சர்ச்சைக்கு மன்னிப்பு கேட்காத நிலையில் தக் லைஃப் படத்தின் வெளியீடு ஒத்திவைப்பு என்ற முடிவுக்கு பட நிறுவனத்தினர் குறிப்பிட்டனர்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்

