images

நூற்றுக்கணக்கானோரை வேலையிலிருந்து நீக்கும் Disney

image

நூற்றுக்கணக்கானோரை வேலையிலிருந்து நீக்கும் Disney

நியூயார்க்:

Walt Disney நிறுவனம் நூற்றுக்கணக்கான ஊழியர்களைப் பணியிலிருந்து நீக்குவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

உலகம் முழுவதும் Disney-யின் படம், தொலைக்காட்சி, நிறுவனத்தின் நிதி ஆகிய துறைகளில் வேலை செய்யும் ஊழியர்கள் பாதிக்கப்படலாம்.

தொலைக்காட்சியைக் காட்டிலும் இணையக் காணொளித் தளங்களை விரும்புவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

அதற்கேற்ப நிறுவனங்கள் தங்கள் வர்த்தக உத்திகளையும் மாற்றியமைக்கின்றன.

2023ஆம் ஆண்டு 5.5 பில்லியன் டாலர் சேமிக்க Disney நிறுவனம் 7,000 பேரை வேலையிலிருந்து நீக்கியது.

ஆதாரம்: Reuters

பகிர்
+ - reset