இந்தியாவில் முதலீட்டில் சிங்கப்பூர் முதலிடம்
புது டெல்லி:
இந்தியாவில் அந்நிய முதலீடு செய்துள்ள நாடுகளின் பட்டியலில் சிங்கப்பூர் முதலிடத்தில் உள்ளது. அங்கு சுமார் 1,500 கோடி டாலரை சிங்கப்பூர் முதலீடு செய்துள்ளது.
கடந்த 7 ஆண்டுகளாக சிங்கப்பூர் முதலிடத்தில் உள்ளது.
இதுதொடர்பாக அண்மையில் இந்திய அரசு வெளியிட்ட தரவுகள் மூலம் இது தெரியவந்துள்ளது.
2023-24 ம் ஆண்டில் 1,177 கோடி டாலராக இருந்த சிங்கப்பூர் முதலீடு, 2024-25 -இல் 1,494 டாலராக அதிகரித்துள்ளது.
இது இந்தியாவுக்கு கிடைத்த மொத்த அந்நிய முதலீட்டில் 19 சதவீதமாகும்.
சிங்கப்பூருக்கு அடுத்தபடியாக மொரீயஸ் உள்ளது. 2023-24 ம் ஆண்டில் 834 கோடி டாலர் முதலீடு இந்தியாவுக்கு கிடைத்துள்ளது.
- ஆர்யன்

