கிளிநொச்சி மத்திய கல்லூரி மைதானத்தில் மாபெரும் இசை விருந்து
கிளிநொச்சி:
வன்னியின் இசைத்தென்றல் பிரபாலினி பிரபாகரன் இலங்கையின் கிளிநொச்சி மத்திய கல்லூரி மைதானத்தில் இசை விருந்து அளிக்க இருக்கின்றார்.
ஈழத்து மக்கள் எல்லோரையும் கிளிநொச்சி மண்ணில் சந்திக்க வருகிறோம் என்று அவர் செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.
இலங்கையின் முதல் தமிழ் பெண் இசையமைப்பாளர் பிரபாலினி பிரபாகரன், தென்னிந்திய பின்னனிப் பாடகர் திவாகர், பின்னனிப் பாடகி பத்மலதா அவர்களுடன் ஈழத்து பாடகர் கோகுலன் சாந்தன் @kokulan santhan இணைந்து இசை விருந்தை வழங்க இருக்கின்றார்கள் என்று அவர் கூறினார்.
உங்களை ஆடி பாடி இன்னிசை மழையில் நனைய வைக்க முற்றிலும் இலவசமான மாபெரும் இசைத்திருவிழா “வன்னியின் இசைத்தென்றல்” நடைபெறவுள்ளது.
ஜூன் 21, மாலை 6:30க்கு கிளிநொச்சி மத்திய கல்லூரி மைதானத்தில் இந்த மாபெரும் இசை நிகழ்ச்சியை படைக்க இருப்பதாக பிரபாலினி பிரபாகரன் கூறினார்.
- ஃபிதா
தொடர்புடைய செய்திகள்

