ஆசியான் நாடுகளிடையே நீடித்து- நிலைத்திருக்கக்கூடிய எதிர்காலத்தை அமைக்கமுடியும்: பிரதமர் அன்வார் உறுதி
ஆசியான் நாடுகளிடையே நீடித்து- நிலைத்திருக்கக்கூடிய எதிர்காலத்தை அமைக்கமுடியும்: பிரதமர் அன்வார் உறுதி
கோலாலும்பூர்:
ஆசியான், வளைகுடா ஒத்துழைப்பு மன்றம், சீனா பொருளாதார மாதிரியைக் கட்டிக்காப்பதன் வழி, வட்டாரத்தில் அனைவரையும் உள்ளடக்கிய நீடித்து- நிலைத்திருக்கக்கூடிய எதிர்காலத்தை உருவாக்க முடியும் என்று பிரதமர் அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
ஆசியானுக்குத் தலைமைதாங்கும் மலேசியா இந்த ஆண்டு 'அனைவரையும் உள்ளடக்கிய நீடித்து- நிலைத்திருக்கும் தன்மையைக்' கருப்பொருளாகக் கொண்டிருப்பதாகத் பிரதமர் கூறினார்.
ஆசியான் நாடுகளிடையே மலேசியா கொண்டுள்ள கடமையை அவர் வலியுறுத்தினார்.
46ஆவது ஆசியான் உச்சநிலை மாநாட்டின் அதிகாரபூர்வத் தொடக்கவிழாவில் வட்டாரத் தலைவர்களிடையே அன்வார் உரையாற்றினார்.
முத்தரப்பு ஒத்துழைப்பு மாதிரியைப் பாதுகாக்க வேண்டும் என்றார் அவர்.
அடுத்த 20 ஆண்டுகளுக்கான திட்டங்கள் குறித்துச் சந்திப்புகள் நடைபெறும்.
ஆசியான் உச்சநிலை கூட்டத்தை ஒருசேர ASEAN - GCC CHINA SUMMIT, ASEAN - GULF COOPERATION COUNCIL (GCC) துவங்கியுள்ளது.
- ஃபிதா

