images

ஆசியான் உச்சநிலை மாநாட்டில் கலந்து கொண்டுள்ள தலைவர்களை வரவேற்றார் பிரதமர் அன்வார் இப்ராஹிம் 

image

ஆசியான் உச்சநிலை மாநாட்டில் கலந்து கொண்டுள்ள தலைவர்களை வரவேற்றார் பிரதமர் அன்வார் இப்ராஹிம் 

கோலாலம்பூர்: 

46ஆவது ஆசியான் உச்சநிலை மாநாடு இன்று மே 26,27ஆம் தேதிகளில் தலைநகரில் உள்ள கோலாலம்பூர் அனைத்துலக மாநாட்டு மையத்தில் நடைபெற்று வருகிறது. 

ஆசியான் நாடுகளிலிருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட பேராளர்கள் 46ஆவது ஆசியான் உச்சநிலை மாநாட்டில் கலந்து கொண்டுள்ளனர். 

இந்நிலையில் ஆசியான் கூட்டத்தில் கலந்து கொண்ட தலைவர்களைப் பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் வரவேற்றார். 

அவர்களுக்கு உரிய மரியாதையுடன் அலங்கரிக்கப்பட்ட ஆசியான் பூங்காவின் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. 

இதனை டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

-மவித்திரன் 

பகிர்
+ - reset