ஆசியான், அமெரிக்கா சந்திப்புக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் இணக்கம் வழங்க வேண்டும்: பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் கோரிக்கை
ஆசியான், அமெரிக்கா சந்திப்புக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் இணக்கம் வழங்க வேண்டும்: பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் கோரிக்கை
கோலாலம்பூர்:
ஆசியான், அமெரிக்கா சந்திப்புக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இணக்கம் வழங்க வேண்டும் என்று பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கோரிக்கையை முன்வைத்தார்.
இவ்வருட தொடக்கத்தில் நடந்த வெளியுறவு அமைச்சர்களின் ஆசியான் கூட்டத்தினைத் தொடர்ந்து ஆசியான், அமெரிக்கா கூட்டத்தை நடத்த வலியுறுத்தப்பட்டு வந்தது.
ஆசியான் - அமெரிக்கா கூட்டத்தை ஏற்று நடத்துவதற்கு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பின் ஆதரவு இங்கு அவசியமாகிறது.
இதன் காரணமாக அவரிடமிருந்து இணக்கம் பெறுவதற்குத் தாம் கடிதம் எழுதியுள்ளதாக டிரம்ப் சொன்னார்.
ஆசியானின் கடமையாக இது பார்க்கப்படுகிறது. ஆசியானின் எதிர்காலம் என்பது நிலையான, உறுதிப்பாடு கொண்ட வட்டார மேம்பாடாக இருக்க வேண்டும் என்று அன்வார் வலியுறுத்தினார்.
-மவித்திரன்

