46ஆவது ஆசியான் உச்சி நிலை மாநாட்டில் கலந்து கொள்ள பிரபோவோ மலேசியா வந்தார்
46ஆவது ஆசியான் உச்சி நிலை மாநாட்டில் கலந்து கொள்ள பிரபோவோ மலேசியா வந்தார்
சுபாங்:
இந்தோனேசிய அதிபர் பிரபோவோ சுபியாண்டோ 46ஆவது ஆசியான் உச்சி நிலை மாநாட்டில் கலந்து கொள்ள மலேசியா வந்தடைந்தார்.
நாளை தொடங்கி கேஎல்சிசி மாநாட்டு மண்டபத்தில் ஆசியான் உச்சநிலை மாநாடு நடைபெறவுள்ளது.
கடந்த ஆண்டு அக்டோபரில் பதவியேற்ற பிறகு, பிரபோவோவின் முதல் மாநிலத் தலைவர்கள் கூட்டத்தில் கலந்து கொள்ள இங்கு வந்துள்ளார்.
பிரபோவோ, தூதுக்குழுவை ஏற்றிச் சென்ற சிறப்பு விமானம் இரவு 7.20 மணிக்கு இங்குள்ள சுபாங் ராயல் மலேசிய விமானப்படை விமான தளத்தில் தரையிறங்கியது.
வேளாண்மை, உணவுப் பாதுகாப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ முகமது சாபு அவரை வரவேற்றார்.
பின்னர் அவர் கேப்டன் முஹம்மது சயாபிக் நஜ்மி மஸ்லான் தலைமையிலான ராயல் ரேஞ்சர் படைப்பிரிவின் (சடங்கு) 1ஆவது பட்டாலியனைச் சேர்ந்த இரண்டு அதிகாரிகள், 26 உறுப்பினர்களைக் கொண்ட அணிவகுப்பு மரியாதையை ஆய்வு செய்தார் என்பது குறிப்பிட்டத்தக்கது.
- பார்த்திபன் நாகராஜன்

