வறுமை ஒழிப்புக்கு ஆசியான் முன்னுரிமை வழங்க வேண்டும்: பிரதமர்
வறுமை ஒழிப்புக்கு ஆசியான் முன்னுரிமை வழங்க வேண்டும்: பிரதமர்
கோலாலம்பூர்:
பிராந்தியத்தில் வறுமை ஒழிப்புக்கு ஆசியான் முன்னுரிமை வழங்க வேண்டும்.
பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் இதனை கூறினார்.
ஆசியான் அதன் வளர்ச்சி நிகழ்ச்சி நிரலின் முக்கிய தூண்களாக வறுமை ஒழிப்பு, பாதிக்கப்படக்கூடிய சமூகங்களின் பாதுகாப்பை முன்னுரிமைப்படுத்த வேண்டும்.
46ஆவது ஆசியான் உச்சநிலை மாநாட்டிற்கு முன்னதாக ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில்,
பொருளாதார வளர்ச்சி மக்கள் நலன், சமூகப் பாதுகாப்பு, பிராந்தியத்தில் உள்ள மக்களின் மனித கண்ணியத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களுக்கு வழிவகுக்கும்.
வறுமை பிரச்சினை என் மனதிற்கு மிகவும் நெருக்கமானது. மலேசியாவில் கடுமையான ஏழைகளுக்கு நாம் பூஜ்ஜிய வறுமையை இலக்காகக் கொண்டு செயல்பட்டு வருகிறோம்.
அடுத்த ஆண்டு அது மீண்டும் வந்தாலும், ஆனால் அது நடக்க அனுமதிக்க நாட்டில் எந்த காரணமும் இல்லை.
எனவே அவர்கள் அதைத் தீர்க்க வேண்டும், அந்த விஷயத்தில் நாங்கள் மிகவும் வெற்றி பெற்றுள்ளோம்.
இதே போன்று ஆசியானும் வறுமை ஒழிப்பு நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்று பிரதமர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்

