images

ஆசியான் உச்சநிலை மாநாட்டில் கலந்து கொள்ள மலேசியாவிற்கு வருகை புரிந்தார் திமோர் லெஸ்தே பிரதமர் 

image

ஆசியான் உச்சநிலை மாநாட்டில் கலந்து கொள்ள மலேசியாவிற்கு வருகை புரிந்தார் திமோர் லெஸ்தே பிரதமர் 

கோலாலம்பூர்: 

46ஆவது ஆசியான் உச்சநிலை மாநாட்டில் கலந்து கொள்ள திமோர் லெஸ்தே பிரதமர் KAY RALA XANANA GUSMAO மலேசியாவிற்கு மாலை வேளையில் வருகை புரிந்தார். 

ஆசியான் உச்சநிலை மாநாடு நாளை கோலாலம்பூர் அனைத்துலக மாநாட்டு மையத்தில் அதிகாரப்பூர்வமாக தொடக்கம் காண்கிறது. 

இன்று மாலை 3.45 மணிக்கு சிப்பாங் அனைத்துலக விமான நிலையத்திற்கு வருகை தந்த KAY RALA XANANA GUSMAOஐ கனிமவள, சுற்றுச்சூழல் அமைச்சர் நிக் நஸ்மி நிக் அஹ்மத் வரவேற்றார். 

எதிர்வரும் மே 26, 27ஆம் தேதிகளில் ஆசியான் உச்சநிலை மாநாடு கே.எல்.சி.சி மையத்தில் கோலாகலமாக நடைபெறவுள்ளது. 

அத்துடன், ஆசியான் - வலைகுடா ஒத்துழைப்பு மன்ற கூட்டமும் ஆசியான் - ஜிசிசி- சீனா கூட்டமும் ஒரு சேர நடைபெறவுள்ளது.

-மவித்திரன் 

பகிர்
+ - reset