ஆசியான் ஒத்துழைப்பை இஸ்லாமிய நாடுகள் உதாரணமாக கொள்ள வேண்டும்: பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கருத்து
ஆசியான் ஒத்துழைப்பை இஸ்லாமிய நாடுகள் உதாரணமாக கொள்ள வேண்டும்: பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கருத்து
கஸான்:
ஆசியான் ஒத்துழைப்பை ஓர் உதாரணமாக கொண்டு இஸ்லாமிய நாடுகள் தங்கள் அண்டை நாடுகளுடன் அணுக்கமான உறவினை மேம்படுத்த வேண்டும் என்று பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கேட்டுக்கொண்டார்.
இஸ்லாமிய நாடுகள் தங்களின் அண்டை நாடுகளுடன் அரச தந்திர உறவுகளை மேலோங்க செய்வது அவசியமாகும்.
இம்மாதிரியான ஒத்துழைப்பு என்பது இலக்கவியல் உருமாற்றம், எரிசக்தி மாற்று விவகாரங்களுக்கு வழிவகுக்கும்.
உலகில் ஆசியான் வட்டாரம் என்பது மிகவும் அமைதியான வட்டாரமாக பார்க்கப்படுகிறது. ஆசியான் தலைவர் என்ற முறையில் மலேசியா அதற்கான சிறந்த வழிமுறைகளை ஏற்படுத்தி வருவதாக பிரதமர் அன்வார் சொன்னார்.
முன்னதாக, பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிமும் மலேசிய பேராளர்களும் கஸான் 2025 கலந்துரையாடலில் கலந்து கொண்டு செய்தியாளர்களிடம் இவ்வாறு தெரிவித்தார்.
-மவித்திரன்

