images

நடிகர் கமல்ஹாசனின் தக் லைஃப் படத்தின் டிரெய்லர் மே 17ஆம் தேதி வெளியாகிறது 

image

நடிகர் கமல்ஹாசனின் தக் லைஃப் படத்தின் டிரெய்லர் மே 17ஆம் தேதி வெளியாகிறது 

சென்னை: 

நடிகர் கமல்ஹாசனின் தக் லைஃப் படத்தின் டிரெய்லர் எதிர்வரும் மே 17ஆம் தேதி வெளியாகிறது 

இந்த தகவலை ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது 

இயக்குநர் மணிரத்னம் இயக்கியுள்ள தக் லைஃப் படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். 

நடிகர் கமல்ஹாசனுடன் நடிகர்கள் சிலம்பரசன், த்ரிஷா கிருஷ்ணன், ஜோஜு ஜார்ஜ், அபிராமி, அசோக் செல்வன், ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். 

தக் லைஃப் படத்திற்கான இசை வெளியீட்டு விழா எதிர்வரும் மே 24ஆம் தேதி சென்னை சாய்ராம் கல்லூரி மண்டபத்தில் நடைபெறவுள்ளது. 

தக் லைஃப் படம் எதிர்வரும் ஜூன் 5ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது.

-மவித்திரன் 

பகிர்
+ - reset