images

மனிதாபிமானப் பணிக்காக மியான்மார் பயணத்தை முஹம்மத் ஹசான் தொடங்கினார்

image

மனிதாபிமானப் பணிக்காக மியான்மார் பயணத்தை முஹம்மத் ஹசான் தொடங்கினார்

சுபாங்:

நிலநடுக்கத்தைத் தொடர்ந்து மனிதாபிமானப் பணியின் ஒரு பகுதியாக வெளியுறவு அமைச்சர் டத்தோஸ்ரீ முஹம்மத் ஹசான் இன்று மியான்மருக்கு ஒரு நாள் பயணத்தைத் தொடங்கினார்.

கடந்த மார்ச் 28 அன்று மியான்மாரை மிகவும் மோசமான நிலநடுக்கம் தாக்கியது.

இது அந்நாட்டில் மிகப் பெரிய பேரழிவை தந்துள்ளது.

இதன் அடிப்படையில் டத்தோஸ்ரீ முஹம்மத் ஹசான் இப் பயணத்தை தொடங்கியுள்ளார்.

இந்த மனிதாபிமானப் பணிக்கு தாய்லாந்து வெளியுறவு அமைச்சர் மாரிஸ் சங்கியம்போங்சா கூட்டாக தலைமை தாங்குகிறார்.

இது மனிதாபிமான நடவடிக்கைகளில் நெருக்கமான ஆசியான் (ASEAN) ஒத்துழைப்பைக் குறிக்கிறது.

மேலும் மியான்மார் மக்களுக்கு பிராந்திய ஒற்றுமை, ஆதரவை பிரதிபலிக்கிறது என்று அவர் கூறினார்.

பார்த்திபன் நாகராஜன்

பகிர்
+ - reset