ECO SHOP நிறுவன பொருட்கள் விலையேற்றம் காண்கிறது: தீபகற்ப மலேசியாவில் 2 ரிங்கிட் 60 காசாகவும் கிழக்கு மலேசியாவில் 2 ரிங்கிட் 80 காசாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது
கோலாலம்பூர்:
கடந்த 20 ஆண்டுகளாக மலேசியாவின் பிரதான பேரங்காடி, அன்றாட பொருட்களை வாங்கும் மையமாக ECO SHOP விளங்கி வருகிறது
ECO SHOP நிறுவனத்தில் விற்கப்படும் பொருட்களுக்கான விலைகள் யாவும் ஏற்றம் காண்பதாக ECO SHOP அறிவித்துள்ளது
அதன்படி, தீபகற்ப மலேசியாவில் 2 ரிங்கிட் 40 காசாக இருந்த விலை 2 ரிங்கிட் 60 காசாக உயரும் வேளையில் கிழக்கு மலேசியாவில் 2 ரிங்கிட் 60 காசாக இருந்த விலை 2 ரிங்கிட் 80 காசாக உயர்கிறது
எதிர்வரும் ஏப்ர்ல 14ஆம் தேதி முதல் இந்த புதிய விலை நடப்புக்கு வருவதாக ECO shop நிர்வாகம் தெரிவித்தது
-மவித்திரன்

