அமெரிக்காவிலிருந்து இறக்குமதியாகும் பொருள்கள் மீது கூடுதலாக 15% வரி: சீனா அறிவிப்பு
பெய்ஜிங்:
அமெரிக்காவிலிருந்து இறக்குமதியாகும் சில பொருள்கள் மீது கூடுதலாக 10 முதல் 15 விழுக்காடு வரை வரி விதிக்கப்போவதாக சீனா அறிவித்துள்ளது.
கோழி, கோதுமை, சோளம், பருத்தி போன்றவற்றுக்குக் கூடுதலாக 15 விழுக்காடு வரி வசூலிக்கப்படும் என்று சீனாவின் நிதியமைச்சு தெரிவித்தது.
காய்கறிகள், பன்றி இறைச்சி, மாட்டிறைச்சி, பழங்கள், பால் சார்ந்த பொருள்கள் ஆகியவற்றுக்கு 10 விழுக்காட்டுக் கூடுதல் வரி விதிக்கப்படும் என்றும் கூறப்பட்டது.
ஆதாரம்: Reuters

