மைக்ரோசாப்ட் நிறுவனம் ஸ்கைப் இணையச் சேவையை நிறுத்தவுள்ளது
மைக்ரோசாப்ட் நிறுவனம் ஸ்கைப் இணையச் சேவையை நிறுத்தவுள்ளது
வாஷிங்டன்:
மைக்ரோசாப்ட் நிறுவனம் ஸ்கைப் இணையச் சேவையை நிறுத்தவுள்ளது.
இவ்வாண்டு மே மாதம் முதல் ஸ்கைப் சேவை இருக்காது என்று அத்தளம் அதன் சமூக ஊடகங்களில் தெரிவித்தது.
ஸ்கைப் சேவை 2003-ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில் 2011-ஆம் ஆண்டு மைக்ரோசாப்ட் நிறுவனம் அச்சேவையை வாங்கியது.
ஸ்கைப் முதலில் இலவசமாகக் கணினிகளுக்கு இடையே குரல் அழைப்புகளை வழங்கியது. அந்தக் காலத்தில் அது புரட்சிகரமாகப் பார்க்கப்பட்டது.
ஆண்டுகள் கடந்துபோக இணையத்தின் வேகம் முன்னேற்றம் அடைந்தது.
பிறகு ஸ்கைப் தளத்தில் காணொளி அழைப்புகளும் சேர்க்கப்பட்டன.
2005-ஆம் ஆண்டுக்குள் ஸ்கைப் தளத்திற்கு 50 மில்லியன் பேர் பதிவு செய்தனர்.
- அஸ்வினி செந்தாமரை

