மாறுபட்ட கட்டணங்கள்: ஓலா, உபேருக்கு அரசு நோட்டீஸ்
மும்பை:
ஆன்லைன் வாடகைக் கார் நிறுவனங்களான ஓலா, உபர் ஆகியவை ஆண்ட்ராய்டு, ஆப்பிள் செல்போன் பயன்பாட்டாளர்களுக்கு ஏற்ப கட்டணங்களை நிர்ணயிப்பதாக புகார் எழுந்ததால் அவற்றுக்கு அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
தேசிய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் அளித்துள்ள நோட்டீஸில், ஒரே இடத்துக்கு பயணிப்பதற்கு ஆண்ட்ராய்டு கைப்பேசி மூலம் பதிவு செய்தால் சற்று குறைவான கட்டணமும், ஆப்பிள் ஐபோன் மூலம் பதிவு செய்தால் சற்று கூடுதல் கட்டணமும் வசூலிக்கப்படுவதாக புகார் எழுந்தது.
இது தொடர்பாக பொது மக்களிடம் இருந்து வந்துள்ள புகார்களுக்கு பதிலளிக்க வேண்டும் என்று தேசிய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் நோட்டீஸ் தெரிவித்துள்ளது.
- ஆர்யன்

