images

10 ஆயிரம் தொழிலாளர்களுக்கு பணியிட சுகாதாரா பாதுகாப்பு ஒருங்கிணைப்பாளராகும் பயிற்சி இலவசமாக வழங்கப்படும்: ஸ்டீவன் சிம்

image

10 ஆயிரம் தொழிலாளர்களுக்கு பணியிட சுகாதாரா பாதுகாப்பு ஒருங்கிணைப்பாளராகும் பயிற்சி இலவசமாக வழங்கப்படும்: ஸ்டீவன் சிம்

கோலாலம்பூர்:

10,000 சிறு, நடுத்தர நிறுவன ஊழியர்களுக்கு பணியிட சுகாதாரா பாதுகாப்பு ஒருங்கிணைப்பாளராகும் பயிற்சி இலவசமாக வழங்கப்படும்.

மனிதவள அமைச்சர் ஸ்டீவன் சிம் இதனை கூறினார்.

நாடு முழுவதும் உள்ள சிறு,நடுத்தர நிறுவனங்களைச் சேர்ந்த 10,000 பங்கேற்பாளர்களுக்கு இலவசமாகப் இப்பயிற்சிகள் வழங்கப்படவுள்ளது.

இதற்காக மனிதவள அமைச்சு கிட்டத்தட்ட 9 மில்லியனை ரிங்கிட்டை ஒதுக்கியுள்ளது.

பாதுகாப்பு ஒருங்கிணைப்பாளராக ஒரு பணியாளரைப் பயிற்றுவித்த சிறு நடுத்தர முதலாளிகளுக்கு இலவசமாக இந்த வாய்ப்பு வழங்கப்படவுள்ளது.

இந்தத் திட்டம் நையோஸ் எனப்படும்  தேசிய பணியிட பாதுகாப்பு, சுகாதார நிறுவனத்தால் செயல்படுத்தப்படும்.

இப்பயிற்சிக்கு தொழில் பாதுகாப்பு, சுகாதார  சட்டம் 2022 உடன் இணங்க வேண்டும்.

மேலும் இது ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட ஊழியர்களைக் கொண்ட முதலாளிகள் பதிவு செய்யப்பட்ட ஒருங்கிணைப்பாளராக பயிற்சி பெற்ற ஒருவரை நியமிக்க அல்லது பணியமர்த்த வேண்டும்.

சம்பந்தப்பட்ட முதலாளிகள் நேரடியாக தொடர்பு கொள்ளலாம் அல்லது நையோஸ் அலுவலகம், வலைத்தளத்தைப் பார்வையிட்டு விண்ணப்பிக்கலாம்.

கேஎல்சிசி மாநாட்டு மையத்தில் நடைபெற்ற ஆசியான் பாதுகாப்பு, சுகாதாரப் பணியாளர்கள் உச்சிமாநாட்டில் அமைச்சர் ஸ்டீவன் சிம் இதனை கூறினார்.

பார்த்திபன் நாகராஜன்

பகிர்
+ - reset