இன்ஸ்டாகிராமில் இனி 3 நிமிடங்கள் ரீல்ஸ் போடலாம்
இன்ஸ்டாகிராமில் இனி 3 நிமிடங்கள் ரீல்ஸ் போடலாம்
நியூ யார்க்:
இன்ஸ்டாகிராமில் இனி 3 நிமிடங்கள் வரை ரீல்ஸ் போடலாம் என்று புதிய அப்டேட்டை அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
உலகின் முன்னணி சமூக வலைதளங்களின் ஒன்றாக இன்ஸ்டாகிராம் செயலி உள்ளது. கோடிக்கணக்கான பயனர்கள் புகைப்படங்கள், விடியோக்களை பகிர்ந்து லைக் பெறுவதற்கும், நண்பர்களுடன் உரையாடுவதற்கும் இன்ஸ்டாகிராமை பயன்படுத்தி வருகின்றனர்.
இன்ஸ்டாகிராமில் 90 நிமிடங்கள் வரை ரீல்ஸ் விடியோக்களை பகிர்ந்து கொள்ளும் வசதி இருந்தது.
நாளுக்குநாள் இன்ஸ்டாகிராம் பயனர்கள் அதிகரித்து வரும் நிலையில், இளம் தலைமுறையினரை மேலும் கவரும் விதமாக புதுபுது அப்டேட்களை வெளியிட்டு வருகின்றனர்.
- ஆர்யன்

