புதிய உலகச் சூழலில் ஆசியான் முக்கியத்துவம் அதிகரிக்கிறது: சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன்
புதிய உலகச் சூழலில் ஆசியான் முக்கியத்துவம் அதிகரிக்கிறது: சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன்
சிங்கப்பூர்:
சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் (Vivian Balakrishnan) மின்னிலக்க கட்டண முறை, மின்சாரக் கட்டமைப்பு ஆகியவை ஆசியான் வட்டாரத்தை ஒருங்கிணைக்க உதவும் கருவிகள் என்று கூறியுள்ளார்.
பெரிய உலகச் சக்திகளிடமிருந்து வரக்கூடிய நெருக்குதல், உலகளாவிய அரசியல் சூழலில் உள்ள ஆபத்துகள் அதிகரிப்பது ஆகியவற்றுக்கு இடையே அது போன்ற ஒருங்கிணைக்கும் முயற்சிகள் தேவைப்படுவதாக ஆசியான் நாடுகள் உணர்வதாய் டாக்டர் பாலகிருஷ்ணன் கூறினார்.
ஆசியான், வல்லரசு நாடுகளின் நோக்கங்களைக் கட்டுப்படுத்தமுடியாது. எனவே உறுப்பு நாடுகள் தங்களைப் பாதுகாத்துக்கொள்வதிலும், தங்கள் பொருளாதாரங்களை வலுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தவேண்டும் என்று டாக்டர் பாலகிருஷ்ணன் சொன்னார்.
லங்காவியில் நடைபெற்ற வெளியுறவு அமைச்சர்கள் சந்திப்புக்குப்பின் அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.
ஆதாரம்: CNA

