images

Apple-இன் புதிய செயற்கை நுண்ணறிவு அம்சம் ரத்து

image

Apple-இன் புதிய செயற்கை நுண்ணறிவு அம்சம் ரத்து

கலிஃபோர்னியா: 

Apple நிறுவனம், செயற்கைத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் அதன் புதிய அம்சத்தை ரத்துச் செய்துள்ளது.

அந்த அம்சம் பலமுறை அதே தவற்றைச் செய்ததால் அது குறித்துப் பலர் புகார் செய்திருந்தனர்.

செய்தி நிறுவனங்களின் செயலிகளிலிருந்து தகவல் குறிப்புகளை அந்த அம்சம் வழங்கி வந்தது.

அதனால் அந்த அம்சத்தை ரத்துச் செய்ய Apple நிறுவனத்திடம் பலர் கேட்டுக்கொண்டனர்.

அதை மேம்படுத்தி எதிர்காலத்தில் வெளியிடத் திட்டம் இருப்பதாக Apple கூறியது.

- அஸ்வினி செந்தாமரை
 

பகிர்
+ - reset