இந்தியாவில் 300 கோடி டாலர்களை முதலீடு செய்கிறது மைக்ரோசாஃப்ட்
பெங்களூரு:
இந்தியாவில் மைக்ரோசாஃப்ட் 300 கோடி டாலர்) முதலீடு செய்ய இருப்பதாக அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சத்யா நாதெள்ளா தெரிவித்தார்.
இந்தியா வந்துள்ள அவர் பிரதமர் நரேந்திர மோடியை கடந்த சந்தித்தார். பின்னர் பெங்களூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய சத்யா நாதெள்ளா, இந்தியாவில் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் 300 கோடி டாலர் முதலீடு செய்ய உள்ளது. செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தில் இந்தியா வேகமாக முன்னேறி வருகிறது.
ஏஐ தொழில்நுட்பத்தில் இந்தியாவை முதன்மை நாடாக மாற்ற வேண்டும் என்பதே இன்றைய முதலீட்டின் நோக்கம் என்றார்.
- ஆர்யன்

