அமெரிக்க டாலருக்கு எதிரான மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு தொடர்ந்து வீழ்ச்சி
கோலாலம்பூர்:
இன்றைய ஆரம்ப வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு வீழ்ச்சியடைந்துள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இன்று 1 அமெரிக்க டாலருக்கு எதிரான மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு 4.47 ஆக வீழ்ச்சியடைந்துள்ளது.
மலேசிய ரிங்கிட் மற்ற நாணனயங்களை விட அதிகமாக வர்த்தகம் செய்தது.
மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு 5.6643/6700 இலிருந்து பிரிட்டிஷ் பவுண்டுக்கு எதிராக 5.6589/6716 ஆக உயர்ந்தது.
யூரோவுக்கு எதிராக 4.7003/7050 இலிருந்து 4.6923/7028 ஆக வலுவடைந்தது.
ஆனால் ஜப்பானிய யெனுக்கு எதிராக நேற்று 5.9844/9989 இலிருந்து 2.9844/9989 ஆக குறைந்தது.
- அஸ்வினி செந்தாமரை

