நல்லவன் எங்கிருந்தாலும் நல்லவனாகவே இருப்பான்
நல்லவன் எங்கிருந்தாலும் நல்லவனாகவே இருப்பான்
"நான் எங்கிருந்தபோதிலும் அவன் என்னை பெரும் பாக்கியம் மிக்கவனாகவே ஆக்கியுள்ளான்'' (திருக்குர்ஆன் 19:31)
எங்கு இருக்கிறோம் என்பது முக்கியமல்ல. இருக்கும் இடத்தில் எப்படி இருக்கிறோம் என்பதுதான் முக்கியம்.
உண்மையான உலோகம் காலத்தால் ஒருபோதும் மாறாது. வைரம் குப்பையில் கிடந்தாலும் கிரீடத்தில் இருந்தாலும் அதன் தன்மையை மாற்றுவதில்லை.
செல்வம், பதவி, சான்றிதழ்கள் ஆகியவை மனிதனுக்குப் பணிவைத்தான் தரவேண்டும். செருக்கை அல்ல.
நல்லவன் எங்கிருந்தாலும் நல்லவனாகவே இருப்பான்.
கெட்டவன் செருப்பு தைப்பவனாக இருந்தாலும் அமைச்சராக இருந்தாலும் கெட்டவனாகவே இருப்பான்.
யூஸுஃப் (அலை) சிறையில் கைதியாக இருக்கும்போது சக கைதிகள் அவரைப் பார்த்துக் கூறினர்:
"உம்மை மிகவும் நல்லவராகவே நாங்கள் காண்கிறோம்'' (12:36)
பின்னர் அவர் மாளிகையில் பிரதம அமைச்சராக இருந்தபோது குடிமக்கள் அவரைப் பார்த்துக் கூறினர்:
"உம்மை மிகவும் நல்லவராகவே நாங்கள் காண்கிறோம்'' (12:78)
எனவே, எங்கிருக்கிறோம் என்பதில் கவனம் செலுத்துவதைவிட, எப்படி இருக்கிறோம் என்பதில் கவனம் செலுத்த வேண்டும்.
இருக்கும் இடத்தில் என்ன செய்துகொண்டிருக்கிறோம்? என்பதுதான் முக்கியம். நாளை நல்லவனாக மாறுவேன் என்பது ஆபத்தான மனோநிலை ஆகும்.
நல்லவன் எங்கிருந்தாலும் நல்லவனாகவே இருப்பான்.
- நூஹ் மஹ்ழரி
தொடர்புடைய செய்திகள்

