images

WhatsAppஇல் புதிய அம்சம்: இனி சந்திப்புகளை எளிதில் திட்டமிடலாம்

image

WhatsAppஇல் புதிய அம்சம்: இனி சந்திப்புகளை எளிதில் திட்டமிடலாம்

கலிபோர்னியா:

உற்றார் உறவினர்கள், நண்பர்கள் ஆகியோரைச் சந்திக்கத் திட்டமிடும்போது WhatsApp உரையாடல் குழுவில் Eventsஐத் தேர்ந்தெடுத்தால் போதும்.

அதன் பின்னர் எங்குச் சந்திக்கலாம், எத்தனை மணிக்குச் சந்திக்கலாம் போன்ற விவரங்களைப் பகிர்ந்துகொள்ளலாம்.

WhatsApp உரையாடல் குழுவில் இருப்போர் அந்த விவரங்களைக் கருத்தில்கொண்டு அவர்களது விருப்பத்தை எளிதில் தெரிவித்துக்கொள்ளலாம்.

உரையாடல் குழுவிலிருந்து வெளியேற வேண்டிய அவசியமில்லை. அனைத்து விவரங்களும் அதில் இடம்பெற்றிருக்கும்.

சில குறிப்புகள்:

ஒருவர் மட்டுமே WhatsApp உரையாடல் குழுவில் 'Events'ஐ நிர்வகிக்கலாம்; அதில் மாற்றங்களைச் செய்யலாம்.

மாற்றம் ஏதேனும் செய்தால் உரையாடல் குழுவில் அறிவிப்பு வரும்.

உரையாடல் குழுவில் இல்லாதோருக்கு அழைப்பு விடுக்க முடியாது.

உரையாடல் குழுவில் புதிதாகச் சேரும் உறுப்பினர்களால் ஏற்கனவே அனுப்பப்பட்ட அழைப்பைப் பார்க்க இயலாது.

பகிர்
+ - reset